வாழி நலம் பெற நாளும் உயர் பெற

தினமும் போற்றிடுவோம்

எங்கள் பள்ளி செயின்ட் திரேசா…


வாழ்வறத்தில் எளிமை கடமையில் முதன்மை

தாரக மந்திரமே

எங்கள் பள்ளியை வளர்த்திடுமே


ஒற்றுமை வளர்ப்போம் உரிமையைக் காப்போம்

நன்னெறி வழியில் நடந்திடுவோம்

குருவை மதிப்போம் திறம்படக் கற்போம்

கலைகளை நெஞ்சினில் பதியவைப்போம்


நாட்டுப் பற்றுடன் தடைகளை எதிர்த்து

சாதனை படைத்திடுவோம்

தமிழ் உயிரென போற்றிடுவோம்


பள்ளியின் பெருமையைப் பாரினில் உயர்த்த

நாமும் செயல்படுவோம்

செந்தமிழ் மொழி காத்திடுவோம்…


வாழி நலம் பெற நாளும் உயர் பெற

தினமும் போற்றிடுவோம்

எங்கள் பள்ளி செயின்ட் திரேசா…